Loading...

தையிட்டிக்கு விஜயம் செய்த நயினாதீவு விகாராதிபதி

 நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பகுதிக்கு இன்றையதினம் (02.01.2026) விஜயம் செய்த குழுவினர் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

தையிட்டி திஸ்ஸ விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

2025ற்கான நிதிப் பயன்பாடு : தேசிய ரீதியில் சாதனை படைத்த வடக்கு மாகாணம்

2025ற்கான நிதிப் பயன்பாடு : தேசிய ரீதியில் சாதனை படைத்த வடக்கு மாகாணம்

முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

அந்தவகையில் நாளையதினமும் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டிக்கு விஜயம் செய்த நயினாதீவு விகாராதிபதி | Nainativu Vihara Vigaradhipathi Visit Thaiyiddi

கடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில் நாக விகாரை விகாராதிபதி தலைமையிலான குழுவானது இன்றையதினம் அங்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஹோட்டல் ஒன்றில் கரப்பான் பூச்சியுடன் வழங்கப்பட்ட நூடில்ஸ்!

யாழில் ஹோட்டல் ஒன்றில் கரப்பான் பூச்சியுடன் வழங்கப்பட்ட நூடில்ஸ்!

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு...!

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு...!